
செய்திகள் மலேசியா
Mahsa பல்கலைக்கழகத்தில் இசைமுரசு நாகூர் ஹனீஃபாவின் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
சௌஜானா புத்ரா:
இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இசை ஆளுமையாகத் திகழ்ந்த இசைமுரசு நாகூர் ஹனீஃபா அவர்களின் நூற்றாண்டு விழா மாஹ்சா பல்கலைக்கழகத்தில் மதிப்பிற்குரிய செனட்டர் தான்ஸ்ரீ ஹனிஃபா அவர்களின் ஏற்பாட்டில், மாண்புமிகு டத்தோஸ்ரீ சரவணன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சௌஜானா புத்ராவில் அமைந்துள்ள மாசா மருத்துப் பல்கலைக்கழக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முழுநாள் நிகழ்ச்சியாக ஒருங்கிணைப்பப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் சர்வதேச பேச்சாளர்கள் கவியருவி அப்துல் காதர், பேராசிரியர் அப்துல் சமது, கம்பம் பீர் முஹம்மது பாகவி கலந்துகொண்டு உரை நிகழ்த்த இருக்கின்றனர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக நாகூர் ஹனீஃபா அவர்கள் பாடிய பாடல்களின் இசைக் கச்சேரியும் நடைபெறும். இதில் நெல்லை அபூபக்கர், சூப்பர் சிங்கர் புகழ் ஃபரீதா, ராஜபாட் ராஜா முஹம்மது, ஹாஜி செய்யது அலி, ஏ ஆர் ஹாஜா ஆகியோர் பாட இருக்கின்றார்கள். இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் இசைக்க இருக்கின்றார்கள்.
இதில் கலந்து கொள்ள நுழைவு இலவசம். ஆனால் பதிவு அவசியம் என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவர் தான்ஸ்ரீ ஹனிஃபா கூறி இருக்கின்றார்.
உடனடியாகப் பதிந்து கொள்ளுங்கள்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeKo_0CHX5DvoQiB2awuTwjGGrAhe06PNU8B64jbeNFf_hX1Q/viewform
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:48 am
பெர்மிம் இளைஞர் தலைமைத்துவ முகாமில் 62 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
September 18, 2025, 10:46 am
சமையலறையில் கரப்பான் பூச்சிகள், எலிகள்: பினாங்கில் பிரபலமான உணவகம் தற்காலிகமாக மூட உத்தரவு
September 18, 2025, 10:24 am
5 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று மதியம் வரை நீடிக்கும்
September 18, 2025, 10:23 am
ஆசியான் வணிக மாநாடு; வட்டார பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மலேசியாவின் உறுதிப்பாட்டின் சான்றாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 18, 2025, 10:21 am
கம்போங் சுங்கை பாரு பிரச்சினையை வெளியாட்கள் அரசியலாக்க வேண்டாம்: ஜொஹாரி சாடல்
September 18, 2025, 9:26 am
பூலாவ் கேரியில் 1,699.68 ஹெக்டேர் நிலத்தில் சிலாங்கூரின் மூன்றாவது துறைமுகம் அமைகிறது: அமிருத்தீன் ஷாரி
September 17, 2025, 8:06 pm