நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூலாவ் கேரியில் 1,699.68 ஹெக்டேர் நிலத்தில் சிலாங்கூரின் மூன்றாவது துறைமுகம் அமைகிறது: அமிருத்தீன் ஷாரி

ஷா ஆலம்:

கோல லங்காட், பூலாவ் கேரியில் 1,699.68 ஹெக்டேர் நிலத்தை மூன்றாவது துறைமுகமாக உருவாக்க சிலாங்கூர் அரசு அடையாளம் கண்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருத்தீன் ஷாரி தெரிவித்தார். 

இதில் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தால் (PKNS) நிர்வகிக்கப்படும் 1,011.71 ஹெக்டேர் கடற்பரப்பு நிலமும், யாயாசன் சிலாங்கூருக்குச் சொந்தமான 687.96 ஹெக்டேர் கடலோர நிலமும் அடங்கும் என்று அவர் கூறினார்.

விவரங்கள் ஒரு மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என்றும், ஒரு மேம்பாட்டாளரை தேர்ந்தெடுக்க போக்குவரத்து அமைச்சகத்திடம் அதன் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமிருதின் ஷாரி கூறினார். 

பூலாவ் கேரி துறைமுகத்தின் முன்னேற்றத்தை மேம்படுத்துவதிலும் நிர்வகிப்பதிலும் மாநில அரசு தீவிர பங்கு வகிக்கும் என்றும், அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் சிலாங்கூரின் வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் ஒரு முக்கிய ஊக்கியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

புதிய மூன்றாவது துறைமுகம் கிள்ளான் துறைமுகத்துகடனான வேறுபாடு என்னவென்றால், கட்டுமானம், அதன் செயல்பாடு இரண்டிலும் எங்களுக்கு அதிக பங்கேற்பும் ஈடுபாடும் இருக்கும் என்று அவர் கூறினார்.

நேற்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், முன்மொழியப்பட்ட மூன்றாவது துறைமுகத்திற்காக PKNS, யயாசன் சிலாங்கூர் நிலத்தில் ஒரு புதிய, நிலையான, போட்டித்தன்மை வாய்ந்த வளர்ச்சியைத் திட்டமிடுவதற்கு இடையே ஒரு ஒத்துழைப்பை முறைப்படுத்துகிறது என்று அமீருத்தீன் ஷார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset