நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விபத்தில் மரணமடைந்த மாணவி நிமலா சங்கரி குழும்பத்தாருக்கு யூனிமேப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது

கங்கார்:

விபத்தில் மரணமடைந்த மாணவி நிமலா சங்கரி குழும்பத்தாருக்கு யூனிமேப் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டது.

இந்த கடினமான நேரத்தை எதிர்கொள்ள முழு குடும்பமும் உறுதியுடனும் வலிமையுடனும் இருக்கட்டும் யூனிமேப் கேட்டுக் கொண்டது.

முன்னதாக வடக்கு நோக்கிச் செல்லும் கிலோமீட்டர் 257 வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நிமலா பயணித்த கார் விபத்தில் சிக்கியது.

இந்த மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த (யூனிமேப்) நிமலா சங்கரி மரணமடைந்தார்.

அவரது சகோதரி பலத்த காயங்களுக்கு இலக்காகினார்.

27 வயது பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற நிசான் அல்மேரா கார், வலதுபுறப் பாதையில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்தது.

பின்னர் சாலையின் இடதுபுறமாகச் சென்று, இரும்பு தடையில் மோதி இடதுபுறப் பாதையில் கவிழ்ந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

மேலும் இடது பாதையில் சென்ற லாரி பிரேக் போட முடியாமல் பாதிக்கப்பட்டவரின் வாகனத்தின் மீது மோதியது.

பேரா தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல் உதவி இயக்குநர் ஷாஸ்லீன் முகமட் ஹனாஃபியா இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset