நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான மாபெரும் பூப்பந்து போட்டி: செப்டம்பர் 27இல் நடைபெறும்

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் பூப்பந்து கிளப் கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான  பூப்பந்து போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

பிரிக்பீல்ட்ஸ் பூப்பந்து கிளப் தலைவர் சேகரன் வேலாயுதம் இதனை தெரிவித்தார்

இப்போட்டி வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு செராஸ்  அரினா டிபிகேஎல் பேட்மிண்டன் அரங்கில் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.

விலாயா மாநிலத்தில் உள்ள 15 தமிழ்ப் பள்ளிகளில் 14 பள்ளிகளைச் சேர்ந்த 230க்கும் மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி இடம் பெறுகிறது.

இரண்டு ஒற்றையர் மற்றும் மூன்று இரட்டையர்  பிரிவில் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

குருப் லீக் பாணியில் போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும்  முதல் இரு இடங்களைப் பிடிக்கும் குழுக்கள் கால் இறுதி சுற்றுக்கு  தகுதி பெறும்.

கால் இறுதியில் வெற்றி பெறும் நான்கு குழுக்கள் அரையிறுதி சுற்றில் விளையாடும்.

இதில் வெற்றி பெறும் இரண்டு குழுக்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு பெறும் என்று அவர் கூறினார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை தட்டிச் செல்லும் குழுவுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

மேலும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மெடல் வழங்கப்படும்.

மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் சிறப்பு வருகை தந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.

மலேசிய பூப்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ பாராட் மணியம், அனைத்துலக பூப்பந்து சம்மேளனத்தின் உறுப்பினர் வேணுகோபால் ஆகியோரும் சிறப்பு வருகை புரிகின்றனர் .

தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மத்தியில் பூப்பந்து போட்டியை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டி மாபெரும் அளவில் நடத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset