நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணியை வழிநடத்த பாஸ் இப்போது தயாராக உள்ளது: தக்கியூடின்

அலோர்ஸ்டார்:

தேசியக் கூட்டணியை வழிநடத்த பாஸ் இப்போது தயாராக உள்ளது என்று அதன் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் கூறினார்.

பாஸ் கட்சி இப்போது தேசியக் கூட்டணி பெரிய பங்கை வகிக்கத் தயாராக உள்ளது என்பதற்கான தெளிவான சமிக்ஞையை அனுப்பப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நேற்றைய மாநாட்டில் அதன் உறுப்பினர்கள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

கட்சிக்கு முன்னர் தேசியக் கூட்டணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. அது பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினிடமிருந்து வந்தது.

அதனால் தான் பாஸ் இப்போது தேசியக் கூட்டணி தலைவராக ஆவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறுகிறோம்.

 71வது பாஸ் ஆண்டு மாநாட்டிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

முன்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாஸ் முன்னதாகவே இந்த சலுகையை நிராகரித்தது.

அந்த நேரத்தில் முன்னாள் பிரதமர் என்ற முறையில் டான்ஸ்ரீ மொஹைதின் வகித்த பதவியால் பாஸ் அவர் மிகவும் பொருத்தமானவர் என்று நினைத்தது.

ஆனால் இப்போது நாங்கள் தயாராக இருக்கிறோம். 

74 ஆண்டுகளாக நாங்கள் இருக்கும் ஒரே கட்சியும், ஒரு முக்கிய கட்சியும் நாங்கள் தான் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset