நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துவாஸ் சோதனைச் சாவடியில் 18,400 மின்சிகரெட்டுகள் பறிமுதல்: மலேசியர் கைது

சிங்கப்பூர்:

லோரி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18,400க்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளும் அதுதொடர்பான 1,400 பாகங்களும் துவாஸ் சோதனைச்சாவடியில் கைப்பற்றப்பட்டன.

மின்சிகரெட் புழக்கத்திற்கு எதிராக 2025 செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் கடுமையான தண்டனைகள் நடப்பிற்கு வந்துள்ளன.

அதன்பிறகு சிங்கப்பூரின் நிலவழி சோதனைச்சாவடிகளில் பிடிபட்ட கடத்தல் மின்சிகரெட்டுகளைப் பொறுத்தவரை இதுவே ஆக அதிகம் என்று செவ்வாய்க்கிழமை முகநூல் பதிவு ஒன்றின் வழியாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சோதனைச் சாவடியை அடைந்த அந்த லோரி மீது சந்தேகம் கொண்ட ஐசிஏ அதிகாரிகள், அதனை மேம்பட்ட சோதனைகளுக்காக அனுப்பிவைத்தனர்.

சோதனையில் அவ்வாகனத்தில் மின்சிகரெட்டுகளும் அது தொடர்பான பொருள்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் மலேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஆணையம் தெரிவித்தது.

கைப்பற்றப்பட்ட பொருள்களும் அந்த ஆடவரும் மேல்விசாரணைக்காகச் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset