நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சோலார் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை நீக்கக் கோரிய ரோஸ்மாவின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது

கோலாலம்பூர்:

சோலார் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை நீக்கக் கோரிய ரோஸ்மாவின் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

சரவாக்கில் 1.25 பில்லியன் ரிங்கிட் சோலார் திட்டம் தொடர்பான ஊழல் வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதியை நீக்கக் கோரி ரோஸ்மா மன்சரின் மேல்முறையீடடு செய்திருந்தார்.

அவரின் இந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

ஜைதி இப்ராஹிம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு, மேல்முறையீட்டை ஆதரிக்க எந்த தகுதியும் இல்லை என்று கண்டறிந்தது.

அப்போது பதவி நீக்க விண்ணப்பத்தை நிராகரித்ததில் நீதிபதி தவறாக இருக்கவில்லை  என்று குழுவின் முடிவை அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவி, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஜைனி மஸ்லானின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறார்.

தற்போது மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் .

அவர் வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதற்கான ரோஸ்மாவின் விண்ணப்பத்தை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset