நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏ 2இன் மின்சார மூலத்தை மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்: அந்தோனி லோக்

சிப்பாங்:

கேஎல்ஐஏ 2இன் மின்சார மூலத்தை மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2இல் மின்சார விநியோக மூலத்தை மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்.

இதனால் மீண்டும் இடையூறுகள் ஏற்படாது.

தற்காலிக இடையூறுக்கான காரணம் குறித்து மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டிடம் இருந்து தனது துறைக்கு அறிக்கை கிடைத்துள்ளது.

மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் சொன்னது போல், மீண்டும் மின்தடை ஏற்படாமல் இருக்க, அவர்கள் மின்சார விநியோக மூலத்தை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset