நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொழுகைகளை நடத்த பள்ளிவாசல், சூராவ்களுக்கு உத்தரவு

புத்ராஜெயா:

சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொழுகைகளை நடத்த பள்ளிவாசல், சூராவ்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமர் துறையின் மத விவகாரங்களுக்கான அமைச்சர் நயிம் மொக்ரார் இதனை கூறினார்.

சபா மாநிலத்தில் மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சபா மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவு குறித்து தனது இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே வேளையில் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்), கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய மதத் துறை (ஜாவி) ஆகியவற்றின் கீழ் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், சூராவ்களும் வெள்ளம்,  நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சபா மக்களின் நல்வாழ்வுக்காக தொழுகைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன.

இதன் மூலம் தற்போது நடைபெற்று வரும் பெரும் சோதனையிலிருந்து சபாவின் அனைவரும் விரைவில் மீண்டு வருவார்கள் என நம்புகிறேன் என்று அமைச்சர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset