நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா, கிளந்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கோத்தா கினபாலு:

சபா, கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 3,000க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்ட அறிக்கையில், 

இன்று காலை 8 மணி நிலவரப்படி, 107 கிராமங்களின் 813 குடும்பங்களைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,897 ஆக அதிகரித்துள்ளது 

நேற்று 752 குடும்பங்களைச் சேர்ந்த 2,813 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் 22 தற்காலிக வெள்ள நிவாரண மையம், ஒரு நிரந்தர வெளியேற்ற மையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மையம் செப்டம்பர் 9 முதல் ஐந்து மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கிளந்தானில் உள்ள ஃபெல்டா சிகு 1, 2, குவா முசாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 70 ஆக இருந்தது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி 212 ஆக அதிகரித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset