நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாங் வாங்கி போலிஸ் தலைவரை காயப்படுத்தியது  ஒரு இழிவான, கண்டிக்கத்தக்க செயலாகும்: அன்வார்

கோலாலம்பூர்:

டாங் வாங்கி போலிஸ் தலைவரை காயப்படுத்தியது ஒரு இழிவான, கண்டிக்கத்தக்க செயலாகும். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு சாடினார்.

கம்போங் சுங்கை பாருவில் நடந்த சலசலப்பில் டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைவர் சுசில்மி அஃபெண்டி சுலைமான் காயமடைந்தார்.

அவரின் காயப்படுத்தியதற்கு காரணமான  செயல்பட்டவர்களையும் தாக்குதல் நடத்தியவர்களையும் உடனடியாக விசாரித்து கைது செய்ய வேண்டும்.

இந்தச் செயலை வெறுக்கத்தக்கது என்றும், கண்டிக்க வேண்டும் என்றும் பிரதமர் விவரித்தார்.

மேலும் அமைதியாக ஒன்றுகூடி ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை அரசாங்கம் எப்போதும் மதிக்கிறது.

 இது முன்னர் நடைபெற்ற பல்வேறு கூட்டங்கள் மூலம் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சுதந்திரக் கொள்கை அனைத்து தரப்பினரும் சட்டம், சட்டத்திற்கு பொறுப்பாகவும் கீழ்ப்படிதலுடனும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset