நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எத்தனை விளக்கங்கள் வந்தாலும் அரசு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்படுவதற்கான ஆதாரங்கள் மஇகாவிடம் உள்ளது: சிவசுப்ரமணியம்

கோலாலம்பூர்:

அரசாங்க தரப்பில் இருந்து எத்தனை விளக்கங்கள் வந்தாலும் அரசு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்படுவதற்கான ஆதாரங்கள் மஇகாவிடம் உள்ளது.

மஇகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் இதனை கூறினார்.

எஸ்டிபிஎம், மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பது இல்லை.

குறிப்பாக கேட்கும் துறையில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என மஇகா உதவித் தலைவர் டத்தோ நெல்சன் கூறியிருந்தார்.

இது தொடர்பில் அரசாங்கத் தரப்பில் இருந்து பல விளக்கங்கள் வந்து கொண்டிருக்கிறது.

உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடிரும் இது தொடர்பில் பேசியுள்ளார்.

அரசாங்க தரப்பில் இருந்து எத்தனை விளக்கங்கள் வந்தாலும் தகுதியான மாணவர்களுக்கு இடம் கிடைப்பது இல்லை என்பது தான் உண்மை.

அதே வேளையில் விண்ணப்பித்த துறைக்கு பதிலாக வேறு துறை கிடைத்த மாணவர்களின் பட்டியலும் மஇகாவிடம் உள்ளது.

ஆக ஒவ்வொரு ஆண்டும் இப்பிரச்சினைக்கு விளக்கம் கொடுக்காமல் அதற்கு தீர்வு கானும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

குறிப்பாக அரசு பல்கலைக்கழகங்களுக்கான மாணவர்கள் தேர்வுக் குழுவில் அனைத்து இனமும் இருக்க வேண்டும்.

இதற்காக யூபியூவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் அரசு பல்கலைக்கழகங்களில் பயிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset