நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் மின்-சிகரெட்டு வாங்குவோரில் சிங்கப்பூரர்களே அதிகம்

ஜோகூர் பாரு: 

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதோடு அதனை பயன்படுத்துவோர் மீது  நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜொகூர் பாருவில் மின்-சிகரெட் வாங்குவோரில் பெரும்பகுதியினர் சிங்கப்பூரர்கள் என்று அங்குள்ள கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

ஜொகூரிலும் மின்-சிகரெட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடைகளில் இதரப் பொருள்களுக்கு மத்தியில் மின்-சிகரெட்டுகளை அவர்கள் மறைத்து விற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.

பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிப்படும் மின்-சிகரெட்டுகளை சிங்கப்பூரர்கள் அதிகம் வாங்குவதாக மற்றொருவர் சொன்னார்.

பேராங்காடியிலுள்ள சிறுசிறு கடைகள் தவிர்த்து ஜொகூர் பாருவில் மின்-சிகரெட்டுகளை மட்டுமே விற்பனை செய்யும் தனிப்பட்ட கடைகளும் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. ஆனால் அவை ரகசியமாகச் செயல்படுவதில் முன்னெச்சரிக்கையாக இருக்கின்றன. 

முன்பு சிங்கப்பூருக்கு வாகனங்களில் சென்று மின்-சிகரெட்டை வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்துவந்த ஓட்டுநர்கள் தற்போது அவ்வாறு செய்யப் பயப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் கள்ளச்சந்தையில் விற்கப்படும் மின்-சிகரெட்டுகளின் விலை ஜொகூரைக் காட்டிலும் மும்மடங்கு அதிகம். 

சிங்கப்பூரில் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து கடுமையான தண்டனைகள் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset