நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் மின்-சிகரெட் கட்டங்கட்டமாகத் தடை செய்யப்படும்: சுகாதார அமைச்சர் ஸுல் கிஃப்லி 

கோலாலம்பூர்:

மலேசியாவில் மின்சிகரெட்டுகள் கட்டங்கட்டமாகத் தடைசெய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் ஸுல் கிஃப்லி அஹ்மது (Dzulkefly Ahmad) கூறினார்.

மின்-சிகரெட்டுகளின் விற்பனை, பயன்பாடு போன்றவற்றை முற்றிலும் ஒழிக்கும் முயற்சி அது என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக குறிப்பிட்ட ஒரு வகை மின்- சிகரெட் தடை செய்யப்படும். பிறகு அனைத்துவகை மின்-சிகரெட் தொடர்பான பொருள்களுக்கும் தடை விதிக்கப்படும் என்றார் அமைச்சர்.

இப்போதைக்கு 6 மாநிலங்கள் மின்-சிகரெட் விற்பனை உரிமத்தைப் புதிதாக வெளியிடவோ புதுப்பிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளன. 

அவை ஜொகூர் (Johor), கிளந்தான் (Kelantan), திரங்கானு (Terengganu), பெர்லீஸ் (Perlis), கெடா (Kedah), பகாங் (Pahang) ஆகிய மாநிலங்கள் என்றார் அமைச்சர்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset