நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தை மேம்படுத்தும் நோக்கில் ஃபிரான்சாய்ஸ் தொடர்பான புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

இந்திய சமுதாயத்தை மேம்படுத்தும் நோக்கில் ஃபிரான்சாய்ஸ் தொடர்பான புதிய  திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழில்முனைவோர் மேம்பாடு  கூட்டுறவு மேம்பாட்டுத் துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

பெர்பாடானான் நேஷனல் பெர்ஹாட் மூலம் அமைச்ச்சால் உருவாக்கப்பட்ட முதல் திட்டம் இதுவாகும்.

அமைச்சின் நிதியுதவி ஆதரவுடன், இந்திய சமூகத்தினர் ஒரு உரிமையாளராக  ஃபிரான்சாய்ஸ் துறையில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ கைருல் டிசாமி தாவுத், அமைச்சக அதிகாரிகளுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தை உருவாக்க கடுமையாக உழைத்துள்ளார்.

இந்திய சமூகம் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்த இந்த முயற்சி சிறந்த தளமாக இருக்கும்.

8ஆவது ஆசியான் உள்ளடக்கிய வணிக மன்றத்தை  திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.

இதை தவிர ஆலயங்கள்,  தமிழ்பள்ளிகள் சம்பந்தப்பட்ட திட்டங்களை கண்காணித்து வரும் டத்தோஸ்ரீ ரமணன்,

இத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக தனது குழு ஆலயங்களின் பட்டியலை சேகரித்து வருகிறது.

மேலும் தமிழ்ப்பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப ஆய்வகங்களை அமைப்பதற்கான ஒதுக்கீடு,  ஆறு பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக கல்வியமைச்சுடன் நெருக்கமான ஒத்துழைத்து வருகிறேன்.

குறிப்பாக குஸ்கோப் அமைச்சின் கீழ் உள்ள பல திட்டங்கள் ஒதுக்கீடு முழுமையாகப் பயன்படுத்தப்படுவதன் மூலம் நல்ல தாக்கத்தை பதிவு செய்துள்ளன என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset