நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பேராசியர் மீது காப்பி அடித்த மாணவிகள் பாலியல் புகார்: 10 ஆண்டுகளாக போராடி விடுதலை

திருவனந்தபுரம்:

கேரளத்தில் கல்லூரி தேர்வில் காப்பி அடித்தபோது பிடிபட்ட மாணவிகள் அளித்த பாலியல் புகாரை  10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் போராடி விடுதலை பெற்றார் மூணாறு அரசு கல்லூரியின் பொருளாதார துறையின் முன்னாள் தலைவரான ஆனந்த் விஸ்வநாதன்.
2014இல் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் விசாரணை நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவித்தது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாணையின்போது தேர்வில் மாணவிகள் காப்பி அடித்ததும், அவர்களைப் பிடித்ததால் ஆனந்த் விஸ்வநாதனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்ததும் அந்த விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து உத்தரவிட்டார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset