நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

8 ஆண்டுகளுக்கு பிறகு ஜிஎஸ்டி வரி குறைப்பு: எந்த பொருள்கள் விலை குறைகிறது? எது அதிகரிக்கிறது?

புது டெல்லி:  

ஜிஎஸ்டி அறிமுகமாகி மாத ரூ. 1 லட்சம் கோடியை தாண்டி அரசு வசூலித்து வந்தநிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிய அரசு வரியை குறைத்துள்ளது.
அதன்படி, 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் விலை குறையும்,

விலை உயரும் பொருட்களின் விவரம்.விலை குறையும் பொருட்கள்:
32 இன்ச்களுக்கு மேலான டிவி, ஏசி, மானிட்டர், டிஷ் வாஷ் இயந்திரம் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் மீதான அவரை 28%-லிருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பேரீச்சம்பழம் மாதிரியான உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி, கன்டன்ஸ்டு மில்க், வெண்ணெய், நெய், பனீர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பொருட்கள் 12%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பாஸ்தா, கார்ன்ஃப்ளேக்ஸ், பிஸ்கட், சாக்லெட்டுகள், கோகோ பொருட்கள் 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மிக்சர் உள்ளிட்ட சாப்பிட தயாராக இருக்கும் பேக் செய்யப்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

விவசாய உரங்கள், விதைகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கும், பென்சில், கிரேயான்ஸ் உள்ளிட்ட எழுதுபொருட்கள், நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி சார்ந்த பொருட்களுக்கும்  இனி ஜிஎஸ்டி வரி இல்லை.

விலை உயரும் பொருட்கள்: பான் மசாலா, குட்கா, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கும், சொகுசு கார்களுக்கும் 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset