நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பேரணியில் பைக்கை இழந்த  தொண்டருக்கு புதிய பைக் அளித்த ராகுல்

புது டெல்லி:

பிகாரில் பேரணியின்போது  பைக்கை தொலைத்த நபருக்கு புதிய பைக்கை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரிசளித்தார்.

பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறி ராகுல் பிகாரில் பேரணி நடத்தி வருகிறார். இதில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தப் பேரணியின்போது தர்பங்காவில் இருசக்கர வாகனப் பேரணியையும் ராகுல் காந்தி மேற்கொண்டார். அப்போது, ராகுல் காந்தியின் பாதுகாவலர்கள் பயணிப்பதற்கு தனது இருசக்கர வாகனத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த சுபம் சௌரப் என்ற நபர் கொடுத்துள்ளார்.

பேரணிக்கு பிறகு தனது இருசக்கர வாகனம் தொலைந்துவிட்டது அவருக்குத் தெரியவந்தது. இதுகுறித்த தகவல் வெளியானதையடுத்து பேரணி செல்லும் வழியில் காரிலிருந்து இறங்கிய ராகுல் காந்தி புதிய மோட்டார் சைக்கிளுக்கான சாவியை சுபம் சௌரப்புக்கு அளித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset