செய்திகள் இந்தியா
முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை: இந்தியாவில் புதிய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்தது
புது டெல்லி:
இந்தியாவில் புதிய குடியேற்ற சட்டம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பாஸ்போர்ட் சட்டம்,வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை ஒன்றிணைத்து புதிய குடியேற்ற மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏப்ரலில் ஒப்புதல் வழங்கினார்.
செப்டம்பர் 1 முதல் அமலாகி உள்ள இந்த புதிய சட்டத்தின்படி, போலி பாஸ்போர்ட், போலி விசாக்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்தால் 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறை, ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டினரை அழைத்து வரும் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
விசா காலம் முடிவடைந்த பின்னரும் இந்தியாவில் சட்ட தங்கியிருக்கும் வெளிநாட்டினர் குறித்து ஹோட்டல்கள், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் கண்டிப்பாக குடியேற்ற அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வந்தால் 24 மணி நேரத்துக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்கும் இடம், உள்ளூர் தொடர்புகள், இந்தியாவுக்கு வந்த நோக்கம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 12:39 pm
அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்
May 11, 2026, 11:02 am
திருமணத்துக்கு யாரும் தங்கம் வாங்கவேண்டாம்: இந்தியர்களுக்கு மோடி எச்சரிக்கை
May 8, 2026, 4:20 pm
மம்தா ராஜினாமா செய்யாததால் மேற்கு வங்க சட்டப்பேரவை கலைப்பு
May 6, 2026, 5:29 pm
அரபிக்கடலில் சிக்கி தவித்த இந்திய கப்பல் பணியாளர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவி
May 6, 2026, 12:44 pm
வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம்: இந்தியா முதலிடம்
May 6, 2026, 11:03 am
ஊடுருவலைத் தடுக்க முதலைகளா?: எல்லைப் பாதுகாப்புப் படையின் யோசனையும் எழும் எதிர்ப்பும்
May 4, 2026, 4:01 pm
