நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குடியரசு துணைத் தலைவருக்கான  ஓய்வூதியத்துடன் எம்எல்ஏ ஓய்வூதியத்தை கோரும் இந்திய முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்

ஜெய்பூர்:

இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எம்எல்ஏ உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து திடீரென உடல் நலக் குறைவு காரணத்தை கூறி தன்கர் ராஜிநாமா செய்தார். ஏதோ நிர்பந்தத்தின்பேரில் அவர் ராஜிநாமா செய்ததாக எதிர்க்கட்சிகள் கூறின.

அவரும் சில நாள்கள் தொடர்பு இல்லாமல் இருந்ததால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பின.

இந்நிலையில், ஜகதீப் தன்கர், 1993 முதல் 1998 ஆண்டுவரை ராஜஸ்தான் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தார். அதனால் முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்தை கோரியுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்படும் வரை முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை அவர் பெற்று வந்தார்.

இதைத் தவிர முன்னாள் குடியரசு துணைத் தலைவருக்கான  ஓய்வூதியமாக ஜகதீப் தன்கர் மாதம் சுமார் ரூ.2 லட்சம் ஓய்வூதியமும் பெறுகிறார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset