நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காங்கிரஸ் தலைமையகத்தை சூறையாடிய பாஜகவினர்

 புது டெல்லி:

பிகாரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வாக்குரிமை பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக கூறி அந்த மாநில காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக தொண்டர்கள் சூறையாடினர்.

பிகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும்  வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு எதிராக ராகுல் நடத்தி வரும் பேரணியில் திடீரென ஒருவர் மைக்கில் பிரதமர் மோடியை அவதூறாக பேசினார். அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதைக் கண்டித்து பாட்னாவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தை நோக்கி பாஜக தொண்டர்கள் பேரணியாகச் சென்றனர்.  அப்போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதையடுத்து. காங்கிரஸ் அலுவலகத்துக்குள் புகுந்த அவர்கள் அலுவலகத்தை சூறையாடினர்.
பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset