
செய்திகள் இந்தியா
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் மோடி: இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை
புது டெல்லி:
7 ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தியான்ஜின் நகரில் நடைபெற்ற அரை மணி நேரம் நடைபெற்ற இந்த இரு தரப்பு நல்லுறவு ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ரஷ்யாவின் கசான் நகரில் சீன அதிபரை சந்தித்துப் பேசிய பிறகு இரு நாட்டு உறவு மேம்பட்டிருப்பதாகவும், எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
எல்லை மேலாண்மை தொடர்பாக இருநாட்டு சிறப்பு பிரதிநிதிகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு மற்றும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா வீரர்கள் மோதல் நடந்த பிறகு இருநாட்டுத் தலைவர்கள் முதல்முறையாக சந்தித்து பேசியுள்ளது யது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சீன பயணத்துக்கு முன்பு ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 10 டிரில்லியன் யென் முதலீடு செய்யப்படும் என்று ஜப்பான் அறிவித்தது.
மேலும், இரு நாடுகளும் அரிய வகை கனிமங்கள், பாதுகாப்புத் துறை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு எனப் பல்வேறு முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 13 ஒப்பந்தங்களை மேற்கொண்டன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 7:09 pm
காங்கிரஸ் தலைமையகத்தை சூறையாடிய பாஜகவினர்
August 30, 2025, 12:39 am
காற்று மாசை குறைத்தால் மூன்றரை ஆண்டுகள் இந்தியர்கள் கூடுதலாக வாழலாம்: ஆய்வில் தகவல்
August 28, 2025, 11:22 pm
உத்தரகண்டில் 300 போலி சாமியார்கள் கைது
August 28, 2025, 11:13 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கன மழை: 41 பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு
August 28, 2025, 10:56 pm
கூகுள் மேப்பை பின் தொடர்ந்து சென்று ஆற்றில் கவிழந்த கார்: 3 பேர் பலி
August 28, 2025, 10:53 pm
டிரம்ப் வரி விதிப்பை சமாளிக்க 40 நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இந்தியா திட்டம்
August 27, 2025, 6:02 pm