செய்திகள் இந்தியா
இந்தியா முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் பெரும் முறைகேடு: அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்
புதுடெல்லி:
நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், தனியார் கல்லூரிகளில் போலி ஆவணங்கள் மூலம் என்ஆர்ஐ ஒதுக்கீட்டின்கீழ் 18,000 அட்மிஷன் போடப்பட்டது அமலாக்கத் துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் என்ஆர்ஐ மாணவர்கள் பலர் உண்மையில் வெளிநாட்டினர் இல்லை. சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏஜென்டுகளுக்கு பணம் கொடுத்து போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளனர். உள்நாட்டு மாணவர்களை வெளிநாடு வாழ் இந்தியர்போல காட்ட ஏஜென்டுகளும் போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்துள்ளனர்.
மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஆர் ஒதுக்கீட்டில் முறைகேடாக மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் கல்லூரிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் போலி என்ஆர்ஐ சான்றிதழ்கள் சிக்கியுள்ளன.
இதுதொடர்பாக மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வங்கியில் வைத்துள்ள வைப்பு தொகை ரூ.6.42 கோடியை முடக்கியுள்ளது. இதேபோல் முறைகேட்டில் ஈடுபட்ட சில தனியார் கல்லூரிகளின் ரூ.12.33 கோடியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
