நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விண்வெளிக்கு முதலில் சென்றது ஆம்ஸ்ட்ராங் அல்ல, ஹனுமன்தான் - பாஜக எம்.பி பேச்சால் சர்ச்சை

புது டெல்லி: 

விண்வெளியில் 1969-ல் முதலில் கால் பதித்தது அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் என்ற வரலாறு இருக்கும்போது, அங்கு முதலில் சென்றது ஹனுமன் என்று பாஜக மூத்த தலைவர் அனுராக் தாக்குர் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.

இமாச்சல் மாநிலத்தில் உள்ள உனா நகரில் அமைந்துள்ள பள்ளியில்  அண்மையில் மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது இந்தக் கேள்வியை கேட்டுள்ளார் .

அவரது கேள்விக்கு ‘நீல் ஆம்ஸ்ட்ராங்’ என மாணவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் பதில் சொல்ல, அல்ல, ‘நான் ஹனுமன் என உணர்கிறேன். இது ஆயிரம் ஆண்டுகள் பழமையான நமது பாரம்பரியம், அறிவு, கலாச்சாரம் என முக்கியமானவற்றை காட்டுகிறது. இது நமக்கு தெரியவில்லை என்றால் பிரிட்டிஷ்காரர்கள் போதித்த பாடத்தோடு நாம் நின்று விடுவோம். பாட புத்தகத்தை கடந்து நமது அறிவை விரிவு செய்ய வேண்டும்' என்றார் அவர். 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset