நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

எதிர்க்கட்சி ஆட்சிகளை திருட பாஜக திட்டம் : காங்கிரஸ்

புது டெல்லி:

வாக்குகளை திருடிய பாஜக தற்போது  எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சிகளை திருட முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

தீவிர குற்றப் புகாரில் கைதாகி, 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்க வகை செய்யும் மசோதாவை கொண்டு வந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு ஒன்றிய அரசு அனுப்பி உள்ளது.

இந்நிலையில், தில்லியில் காங்கிரஸ் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பேசிய கார்கே, மக்களவைத் தேர்தலில், கர்நாடகத்தின் மத்திய பெங்களூர் மகாதேவபுரா பேரவைத் தொகுதியில் வாக்குகள்  திருடப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் உரிய பதில் அளிக்கவில்லை.

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து இப்போது ஆட்சித் திருட்டில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்காக, நாடாளுமன்றத்தில் 3 புதிய மசோதாக்கள் கொண்டுவந்து எதிர்க்கட்சிகளின் அரசை 30 நாள்களுக்குள் கவிழ்க்க முடியும். ஜனநாயகத்தை சீர்குலைக்க கைது நடவடிக்கையை பாஜக கருவியாக பயன்படுத்துகிறது என்றார் கார்கே.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset