நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் பிரதமர் மோடி மவுனம்: ராகுல் காந்தி கண்டனம்

புது டெல்லி:

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.

பிகாரில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெறும் வாக்குக்காளர் நீக்க நடவடிக்கை, வாக்குத் திருட்டு குறித்து ஏதும் பேசவில்லை.

இந்நிலையில், அங்கு வாக்குரிமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பாஜகவும், தேர்தல் ஆணையமும் உங்கள் வாக்குகளைத் திருட முயற்சிக்கின்றன.

இது பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று நடத்தும் செயல். படிப்படியாக மக்களின் வாக்குரிமையை முழுமையாகப் பறிப்பதற்கான முயற்சியாகும்.

வாக்குத் திருடர்  இப்போது பிகாருக்கு வந்துள்ளார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் தனது அரசு நடத்தும் வாக்குத் திருட்டு குறித்து அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

இந்தப் பிரச்னையில் பதிலளிக்க பிரதமர் தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை என்றார் ராகுல்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset