நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வக்பு சொத்துகளை கட்டாயப் பதிவு: வழக்கை உடனடியாக விசாரிக்க மறுப்பு

புது டெல்லி:

UMEED வலைதளத்தில் வக்பு சொத்துகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவுக்கு எதிரான வழக்கை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

UMEED வலைதளத்தை ஜூன் 6ம் தேதி ஒன்றிய அரசு தொடங்கியது. பதிவு செய்யப்பட்ட அனைத்து வக்ஃப் சொத்துகளின் விவரங்களை 6 மாதங்களுக்குள் அந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு வழக்கறிஞர் ஷாருக் ஆலம் முறையிட்டார்.

வக்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது UMEED வலைதளத்தில் வக்ஃப் சொத்துகளை பதிவு செய்வது தொடர்பான சில நிபந்தனைகளை தற்போதைய கட்டத்தில் பூர்த்தி செய்வது கடினம்.  இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றார்.

வக்பு சொத்துகளைப் பதிவு செய்ய யாரும் தடுக்கவில்லை என்று கூறி உடனடியாக வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset