நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நாய்களுக்கு பொது வெளியில் உணவு அளிக்க உச்சநீதிமன்றம் தடை

புது டெல்லி: 

தில்லியில் தெரு நாய்களுக்கு பொது வெளியில் உணவு அளிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

மேலும், அனைத்து தெரு நாய்களையும் பிடித்து சென்று காப்பகங்களில் அடைத்து வைக்க  வேண்டும் என்று முன்பு அளித்த உத்தரவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் கருத்தடை, புழுநீக்கம், தடுப்பூசி செலுத்திய பிறகு  மீண்டும் பிடிக்கப்பட்ட இடங்களிலேயே அவற்றை விட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ரேபிஸ் பாதிப்பு அல்லது  பாதிப்புள்ளதாக சந்தேகிக்கப்படும் நாய்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டியது இல்லை.

தெருநாய்களுக்கு தெருக்கள் உள்ளிட்ட பொதுவெளியில் உணவளிக்கக் கூடாது. பிரத்யேக உணவளிக்கும் இடங்களை உருவாக்க வேண்டும்.

நாய்களைப் பிடிக்கும்போது தடுத்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset