நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

KTMB இன் ETS3 சேவையை பேரரசர் துவக்கி வைத்து குளுவாங்கிற்கு ரயிலை செலுத்துகிறார்

கோலாலம்பூர்: 

கோலாலம்பூர் ரயில் நிலையத்தில் தெற்கு வழித்தடத்திற்கான (KTMB) மின்சார ரயில் சேவை 3 (ETS3) இன் தொடக்க விழாவை பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாக வழிநடத்தினார்.

காலை 7.45 மணிக்கு நிலையத்திற்கு வந்த பேரரசரை போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக், துணை போக்குவரத்து அமைச்சர் ஹஸ்பி ஹபிபுல்லாஹ், தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோர் வரவேற்றனர்.

ETS3 சிறப்பு துவக்க விழாவைத் தொடர்ந்து, ஜோகூரில் உள்ள குளுவாங்கிற்கு பயணம் செய்வதற்காக, மணிக்கு 140 கிமீ வேகத்தில் இயக்கக்கூடிய ETS3 ரயிலின் கட்டுப்பாடுகளை சுல்தான் இப்ராஹிம் தனிப்பட்ட முறையில் கேட்டு அறிந்து கொண்டார்.

இந்தப் பயணம் சுமார் மூன்று மணி நேரம் 30 நிமிடங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குளுவாங்கை அடைந்த பிறகு, சுல்தான் இப்ராஹிம், ஜெமாஸ்-ஜோகூர் பாரு மின்சார இரட்டைப் பாதைத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 2.8 கி.மீ பொது பூங்காவான மஹ்கோட்டா ரயில் பூங்காவைத் திறந்து வைக்க உள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset