நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்து எல்லையில் சந்தேகத்திற்கிடமான இந்தியர்கள் உட்பட ஏழு வெளிநாட்டினரை மலேசிய எல்லைப் பாதுகாப்பு படை தடுத்து நிறுத்தியது

அலோர் ஸ்டார்:

புக்கிட் காயு ஹித்தாம் குடியேற்றம், சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகம் வழியாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஏழு வெளிநாட்டினருக்கு எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு நிறுவனம் (AKPS) நேற்று நுழைவு மறுப்பு அறிவிப்புகளை (NPMs) வெளியிட்டது.

இதில் ஐந்து இந்திய ஆண்கள், ஒரு தாய்லாந்து ஆண் மற்றும் ஒரு இந்தோனேசியப் பெண் அடங்கிய வெளிநாட்டினர் உண்மையான சுற்றுலாப் பயணிகள் அல்லர் என்று சந்தேகிக்கப்படுவதாக AKPS ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“மலேசியாவிற்கு பார்வையாளர்களாக வருபவர்கள் நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யாததற்காக அவர்கள் அனைவருக்கும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 8(3) இன் படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதே நுழைவுப் பாதை வழியாக அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“நுழைவை மறுக்கும் நடவடிக்கை தற்போது நடைமுறையில் உள்ள நிலையான இயக்க நடைமுறைகள் (SOPs), துறை சார்ந்த சுற்றறிக்கைகளின்படி மேற்கொள்ளப்படுகிறது.

"இந்த வழக்கில் பறிமுதல் அல்லது குற்றவியல் கூறு எதுவும் அடையாளம் காணப்படவில்லை," என்று அது கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset