
செய்திகள் மலேசியா
பணியிடங்களில் பகடிவதை; சுகாதார அமைச்சு சமரசம் கொள்ளாது: டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மத்
புத்ராஜெயா:
பணியிடங்களில் நடக்கும் பகடிவதை சம்பவங்களில் சுகாதார அமைச்சு ஒருபோதும் சமரசம் கொள்ளாது. அச்செயலுக்கு எதிரான நடைமுறைகளிலும், விட்டுக் கொடுக்கும் போக்குக் கடைப்பிடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மத் கூறினார்.
பணியிடங்களில் நடக்கும் பகடிவதை சம்பவங்கள் தனிப்பட்ட பிரச்சனை அல்ல.
அது ஓர் அமைப்பின் ஒழுக்கத்தை சீர்குலைத்து, ஊக்கத்தைத் தளரச் செய்து, கூட்டு ஒத்துழைப்பை பாதிக்கும் தொந்தரவு செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் துறைத் தலைவர்கள் உட்பட, பகடிவதையில் ஈடுபடுபவர்கள் விவகாரத்தில் தமது அமைச்சு எவ்விதத்திலும் விட்டுக் கொடுக்காது என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி குறிப்பிட்டார்.
மேலும், பகடிவதை சம்பவங்களை மறைக்க முயற்சிப்பது தெரிய வந்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“கட்டாயம், இது கட்டாயம், எந்த புகாராக இருந்தாலும் அதன் செயல்முறைபடி இருக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் எதுவாக இருந்தாலும், அதில் எந்த சமரசமும் செய்யமாட்டோம். சம்பந்தப்பட்ட தவறுக்கு ஏற்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் கூட, எச்சரிக்கை விடுப்பதைத் தொடர விரும்புகிறோம்'', என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில், சுகாதார அமைச்சு பணியிடத்தில் பகடிவதை நிர்வாக வழிகாட்டியை வெளியீடு செய்த பிறகு, செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார்.
கடந்த ஜூலை 31 ஆம் தேதிவரை 430 பகடிவதை சம்பவங்கள் MyHealth அமைப்பின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சில் பகடிவதை சம்பவங்களைக் கையாளும் நோக்கில் இந்த குறிப்பிட்ட வழிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 21, 2025, 11:13 pm
குவாந்தான் விமானப்படை தளத்தில் விமானப்படை போர் விமானம் விபத்துக்குள்ளானது
August 21, 2025, 5:02 pm
ஏ.டி.எம். உறுப்பினர்கள் கைது: நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை பிரதிபலிக்கவில்லை
August 21, 2025, 4:26 pm
"ஃபத்லினா எங்கே?" போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்புகள்
August 21, 2025, 3:57 pm
KLIA விமான நிலையத்தில் வெளிநாட்டினரை சோதனைகள் இல்லாமல் நுழைய அனுமதித்த இரு மூத்த அதிகாரிகள் கைது
August 21, 2025, 10:59 am
காலாவதியான உரிமங்கள்: JPJ மூன்று பேருந்துகளை பறிமுதல் செய்தது
August 20, 2025, 11:38 pm
மாணவி சாரா கைரினா மகாதீர் மரணம்: 5 பதின்ம வயதுப் பெண்கள் மீது குற்றச்சாட்டு
August 20, 2025, 10:31 pm