நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏ.டி.எம். உறுப்பினர்கள் கைது: நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை பிரதிபலிக்கவில்லை 

கோலாலம்பூர்:

மலேசிய இராணுவப் படை, ஏ.டி.எம்-இன் சில உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், நாட்டின் முழுமையான பாதுகாப்பு அம்சத்தை பிரதிபலிக்கவில்லை.

ஏ.டி.எம்.  மக்களால் மதிக்கப்படுவதாகவும், அது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் என்று நம்பப்படுவதாகவும் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹம்மத் காலித் நோர்டின் தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அது நிச்சயமாக நமது படைகள், அமைச்சின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும். சட்டத்திற்கு புறம்பான செயல்களைச் செய்ய யாரும் தங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற தற்காப்பு அமைச்சு அளவிலான 2025-ஆம் ஆண்டு தேசிய மாதம், ஜாலுர் கெமிலாங்கை பறக்கவிடும் பிரச்சார அறிமுக விழாவில் டத்தோ ஶ்ரீ முஹம்மத் காலித் உரையாற்றினார்.

கடத்தல் நடவடிக்கைக்கு உடந்தையாக செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் அரச மலேசிய இராணுவப் படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த மூன்று மூத்த அதிகாரிகள் மற்றும் இரு முன்னாள் அதிகாரிகள், Op Sohor சோதனை நடவடிக்கையின் வழி முன்னதாக கைது செய்யப்பட்டனர்.

- பெர்னாமா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset