நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

KLIA விமான நிலையத்தில் வெளிநாட்டினரை சோதனைகள் இல்லாமல் நுழைய அனுமதித்த இரு மூத்த அதிகாரிகள் கைது

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) பணியமர்த்தப்பட்டுள்ள இரண்டு மூத்த குடியேற்ற அதிகாரிகள், நாட்டின் நுழைவுப் புள்ளிகளில் சோதனைகள் இல்லாமல் வெளிநாட்டினரை உள்ளே நுழைய சுமார் 400,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீலாய், ஜோகூர் பாருவில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் 40 வயதுடைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

KLIA முனையம் 1, KLIA 2 இல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த கைதுகள் நடந்துள்ளன. 

2022 முதல் 2024 வரை முறையான சோதனைகள் இல்லாமல் வெளிநாட்டினர் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்க அந்த கும்பல் லட்சக்கணக்கான ரிங்கிட் லஞ்சமாக வசூலித்ததாக நம்பப்படுகிறது.

MACC ஒரு தொகையையும் பறிமுதல் செய்து சந்தேக நபர்களுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்கியது. 

KLIA1, KLIA2 இல் தனித்தனியாகப் பணியாற்றிய சந்தேக நபர்கள், விசாரணைக்கு உதவ ஆகஸ்ட் 26 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பகாங் MACC இயக்குனர் ஷுகோர் மஹ்மூத் இந்த கைதுகளை உறுதிப்படுத்தினார். கும்பலில் தொடர்புடைய மற்ற நபர்களை அவர்கள் அடையாளம் கண்டு வருவதாகவும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset