நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை பதவி பறிப்பு மசோதா: இந்திய நாடாளுமன்றத்தில் கடும் அமளி

புது டெல்லி: 

பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள்  மீது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி பறிக்க வழிவகை செய்யும் மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் கடும் அமளிக்கு இடையே தாக்கல் செய்தார்.

5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலோ 31-வது நாள் முதல்வரின் பரிந்துரையின் பேரில், அவரை அமைச்சரவையில் இருந்து மாநில ஆளுநர் நீக்க வேண்டும்.

ஒருவேளை ஆளுநருக்கு பரிந்துரை செய்யவில்லை என்றால், தானாகவே 31-ம் நாளில் அவர் பதவியை இழந்து விடுவார்.
ஜாமீன் பெற்றுவிட்டால் மீண்டும் தனது பதவியை அவர் பெற்று விடுவார்கள். இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தார்.

கொலை, பெரிய அளவிலான ஊழல் போன்ற கடும் குற்றங்கள் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படுகிறது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மசோதாவின் நகலை கிழித்து அமித் ஷா முன் வீசினர்.

மக்களவையில் பேசிய ஏஐஎம்ஐஎம் உறுப்பினர் அசாதுதின் ஓவைசி, இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசுக்கு உள்ள அதிகாரத்தை குறை மதிப்புக்கு உள்ளாக்குகிறது.

அற்பமான குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில், நிர்வாக அமைப்புகள் நீதிபதியாகவும். தண்டிப்பவராகவும் மாற இது வழிவகை செய்கிறது. இந்திய நாட்டை காவல் அரசாக மாற்றுவதற்காக, இந்திய அரசியலமைப்பு திருத்தப்படுகிறது என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset