நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

யேமன் மரண தண்டனை செவிலியர் நிமிஷா பெயரில் போலி நன்கொடை வசூல்

புது டெல்லி: 

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியா பெயரில் போலியான நன்கொடை  வசூல் செய்யப்படுகிறது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

நிமிஷா பிரியாவை காப்பாற்ற ஒன்றிய அரசின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்து வேண்டும் என்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இது போலியானது என வெளியுறவு அமைச்சகத்தின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்தது.

கேரளத்தைச் சேர்ந்த 38 வயதான செவிலியர் நிமிஷா பிரியா, யேமன் நாட்டின் தலால் அப்து மஹதியைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள அவருக்கு கடந்த ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset