நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி

புதுடெல்லி: 

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை அறிவிக்கும் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்பி கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ'பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து வேட்பாளரை தேர்வு செய்துள்ளன.

ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது இந்திய ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

அரசியலமைப்பு ஆபத்தில் இருக்கும்போதெல்லாம் அதைக் காப்பாற்ற நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுகிறோம். இந்த தேர்தலில், நாட்டுக்கு நல்ல பணிகளைச் செய்யக்கூடிய ஒரு வேட்பாளர் தேவை என்று நாங்கள் முடிவு செய்தோம்.

பி.சுதர்ஷன் ரெட்டி இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முற்போக்கான சட்ட வல்லுநர்களில் ஒருவர். ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், குவஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நீண்ட, புகழ்பெற்ற சட்ட வாழ்க்கையை அவர் கொண்டுள்ளார் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset