நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்: 4 மணி நேரம் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்

திண்டுக்கல்: 

ஆடி கிருத்திகையையொட்டி, பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 4.30 மணிக்கு விளா பூஜை நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
 
தொடர் விடுமுறையாலும் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டும் அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். 

மலைக்கோயில் பொதுவான வரிசையிலும் கட்டண தரிசன வரிசையிலும் 4 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset