நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகள் நாளை செயல்படும் என்று அறிவிப்பு

சென்னை: 

மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை (25.10.25) பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்துள்ளனர். கடந்த 16-ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான 2வது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகும். தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் அக்.22-ல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதே போல சேலம், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இதேபோல் செங்கல்பட்டு, திருச்சி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset