நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கரூர் துயரம்: பாதிக்கப்பட்ட மக்களை 27ஆம் தேதி விஜய் சந்திக்கிறார்

சென்னை:

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளார்.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். 

அப்போது அளவுக்கு அதிகமாகக் கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியது. இதில், ஆளும் கட்சி சதி இருப்பதாக தவெக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 

மேலும் கரூர் விவகாரத்தை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் அடுத்தடுத்து தலைமறைவானது அரசியல் களத்தில் பேசு பொருள் ஆனது. 

இதனை தொடர்ந்து விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், சென்னை அருகிலுள்ள மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து இந்த சந்திப்பை வரும் திங்கட்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கு காரணம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனால் விசாரணையில் எந்த வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக மாமல்லப்புரத்தில் சந்திப்பு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

கரூர் துயரச்சம்பவம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், அதற்கு சரியாக ஒரு மாதம் கழித்து அக்டோபர் 27ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset