செய்திகள் தமிழ் தொடர்புகள்
தவெக சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம்: தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்
சென்னை:
கரூர் துயரச் சம்பவத்தையொட்டி, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும், இந்த சம்பவம் குறித்து விஜய் மவுனமாக இருந்ததால், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்தன.
இந்நிலையில், “விரைவில் அனைத்து உண்மைகளும் வெளியே வரும். ‘சி.எம். சார்’ பழி வாங்க வேண்டும் என்றால் என் மீது கை வையுங்கள்; தொண்டர்களை விட்டுவிடுங்கள்” என்று விஜய் காணொலி ஒன்றை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பினார். அதன்பின்னர், விஜய் கரூர் நெரிசலில் உயிர்ழந்தோர் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறினார்.
இந்தச் சூழலில், தற்போது, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் நம்மைவிட்டுப் பிரிந்த நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தவெக தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு கழகத்தின் சார்பில் யாரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:34 pm
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000: எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
February 21, 2026, 11:33 pm
தேர்தல் வெற்றிக்குப் பின் அதிகாரப் பகிர்வு பற்றி பேசலாம்: திருமாவளவன்
February 20, 2026, 1:58 am
காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
February 16, 2026, 12:01 am
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸார் கைது
February 14, 2026, 10:17 am
சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் சிராஜ் உயிரிழந்தார்
February 14, 2026, 10:01 am
வலைதள அறிவரங்கம்: மஜகவின் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடலில் உற்சாகம்
February 14, 2026, 9:44 am
