
செய்திகள் தமிழ் தொடர்புகள்
5 தொகுதிகள் வேண்டும்: ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொஹைதீன் எதிர்பார்ப்பு
சென்னை:
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் முஹைதீன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அக்.26-ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் மறைந்த தலைவர் அப்துல்சமது நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 8,000 மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் மாநாடு டிச.28-ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற இருக்கிறது.
கேரளா (கேஎம்சிசி) இஸ்லாமிய கலாச்சார அமைப்பு சார்பில், மும்மத திருமணம் 2026-ஆம் ஆண்டு ஜன.8-ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 2026-ஆம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் யூகங்கள், கருத்துகளை எதிர்க்கட்சியும், புதிய கட்சியும் உருவாக்கி வருகின்றன.
தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு இதுவரை செய்த பல நல்ல காரியங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. வரும் தேர்தலில் மதச்சார் பற்றக் கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்.
அண்மையில் இலங்கை சென்று பிரதமர் ஹரினியை சந்தித்து, ‘தமிழக மீனவர்களை காக்கும் வகையில் இந்தோ- ஸ்ரீலங்கா பிஷ்ரீஸ் கார்ப் பரேஷன் அமைப்பை இரு நாடுகளும் சேர்ந்து உருவாக்கி, இரு நாட்டு மீனவர்களையும் உறுப்பினர்களாக்கி கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமையை வழங்கினால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்’ என தெரிவித்தேன்.
இதையடுத்து அவர், டெல்லியில் இந்திய அதிகாரிகளிடம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். திமுகவுடனான கூட்டணி என்பது தேர்தலுக்கானது கிடையாது. கொள்கை ரீதியானது. என்றும் திமுகவுடன் தான் கூட்டணி. வேறு கூட்டணி பற்றி சிந்தித்ததோ, கனவுகூட கண்டதோ கிடையாது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-க்கு 5 தொகுதிகள் வழங்க வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அதன்படி திருச்சி, சென்னை, கடலூர், நெல்லை, தஞ்சாவூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 5 தொகுதிகளை எதிர்பார்க்கிறோம்.
அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக இணையும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. இவை ஒன்றிணைந்தால் திமுகவுக்கு சவாலாக இருக்குமா என்று கேட்டால், தேர்தலே சவாலாக தான் இருக்கும். பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்பது தான் கடந்த கால வரலாறு.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2025, 4:52 pm
காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை
October 21, 2025, 12:48 pm
வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மழை தொடரும் என அறிவிப்பு
October 20, 2025, 11:11 am
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: அடுத்த 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்
October 19, 2025, 4:18 pm
ஏழை-எளியவர்களின் மகிழ்ச்சி கலந்ததே பண்டிகை: தீபாவளி நிகழ்ச்சியில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு
October 19, 2025, 9:48 am
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்ட பேருந்துகளில் 6,15,992 பயணிகள் பயணம்
October 18, 2025, 10:52 pm
தவெக சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம்: தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்
October 18, 2025, 8:49 am
தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி நியமனம்
October 17, 2025, 1:53 pm