நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஏழை-எளியவர்களின் மகிழ்ச்சி கலந்ததே பண்டிகை: தீபாவளி நிகழ்ச்சியில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு

திருச்சி:

திருச்சி K.K. நகரில் உள்ள அருவி முதியோர் இல்லத்தில் தீபாவளி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும், விருந்தோம்பலும் 
'நாட்டுக்கு நல்லது செய்வோம்' என்ற அமைப்புடன் இணைந்து
நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி பங்கேற்று புத்தாடைகளை வழங்கினார். 

"பண்டிகைகள் என்பது ஓடிக்கொண்டே இருக்கும் மனிதனுக்கு ஒரு சமூக இளைப்பாறல் போன்றதாகும்.

"நமது நாட்டில் பல்வேறு சமூகத்தினர் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். அதில் தீபாவளியும் ஒன்று.

இதுபோன்ற பண்டிகைகளில் ஏழை- எளிய மக்களுக்கு  உதவிகள் செய்ய வேண்டும். அவர்களின் மகிழ்ச்சியையும்  உள்ளடக்கியதுதான் பண்டிகைகள்.

நாம் நமக்கு பிடித்த பண்டிகையை கொண்டாடும்போது, நமது தெருவில் அல்லது குடியிருப்பு பகுதியில்   இருக்கக்கூடியவர்களையும்  நினைத்துப் பார்க்க வேண்டும்.

பண்டிகை அன்று, ஒரு குடிசை வீட்டில் இருக்கும் ஒரு குழந்தை புத்தாடைகள்  அணியாமல் நின்று கொண்டிருந்தால், அது நமது பண்டிகை மகிழ்ச்சியை உறுத்தும்.

"சமூகத்தால் கண்டுகொள்ளப்படாதவர்களையும், கைவிடப்பட்டவர்களையும், எளிய நிலையில் வாழ்பவர்களையும் தேர்வு செய்து இது போன்ற உதவிகளை வழங்குவது மனநிறைவு  அளிக்கிறது.

"இந்த பயனுள்ள நிகழ்ச்சியை நடத்தியதற்காக, இதன் ஏற்பாட்டாளர்களையும் இதற்கு ஆதரவளித்த நல் உள்ளங்களையும மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பிலே பாராட்டுகளை தெரிவித்து, தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset