நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: 

இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் பேராசிரியர் கே.எம்​.​காதர் மொகிதீனுக்கு தகை​சால் தமிழர் விருதை முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார். 

பல்​வேறு துறை​களில் சாதனை புரிந்​தவர்​களுக்கு அப்​துல் கலாம், கல்​பனா சாவ்லா விருதுகளை​யும் வழங்​கி​னார்.

சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில், இந்த ஆண்​டுக்​கான விருதுகள், சிறப்பு பரிசுகளை முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார். அந்த வகை​யில், ‘தகை​சால் தமிழர்’ விருதை இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் பேராசிரியர் கே.எம்​.​காதர் மொகிதீனுக்கு வழங்​கி​னார். ரூ.10 லட்​சம் விருதுத் தொகை, சான்​றிதழும் வழங்​கப்​பட்​டது.
 
இஸ்ரோ தலை​வர் நாராயணனுக்கு டாக்​டர் ஏபிஜே.அப்​துல் கலாம் விருதும், துளசிமதி முரு​கேசனுக்கு துணிவு, சாகச செயலுக்​கான கல்​பனா சாவ்லா விருதும் வழங்​கப்​பட்​டன. விருதுடன் தலா ரூ.5 லட்​சம் பரிசுத்​ தொகை, பதக்​க​மும் வழங்​கப்​பட்​டது.

நல்​ஆளுமை விருது:

பின்​னர், பல்​வேறு பிரிவு​களில் நல்​ஆளுமை விருதுகள் வழங்​கப்​பட்​டன. சமு​தாய பங்​கேற்பு மூலம் மாற்​றத்தை கொண்​டு​வரும் ஊரக மேம்​பாட்டு முயற்​சிகள் பிரி​வில் உதவி காவல் கண்காணிப்பாளர் வி.பிரசன்ன குமார், வட்​டாட்​சி​யர் ப.பால​கிருஷ்ணன், வட்​டார வளர்ச்சி அலு​வலர் வீ.ய​முனா விருது பெற்​றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset