நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மாடு மீது மோதியதில் ‘வந்தே பாரத்’ ரயில் சேதம்: மாட்டு உரிமையாளர் கைது  

திருச்சி: ​

விருத்​தாசலம் அருகே தண்​ட​வாளத்தை கடக்க முயன்ற மாடு மீது மோதி​ய​தில் வந்தே பாரத் ரயி​லின் முன்​பகுதி சேதமடைந்​தது. சென்னை எழும்​பூரிலிருந்து திருநெல்​வேலிக்கு நேற்று முன்​தினம் மாலை வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. விருத்​தாசலத்தை அடுத்த மணலூர் அருகே சென்​ற​போது, திடீரென தண்​ட​வாளத்தை கடக்க முயன்ற மாட்​டின் மீது ரயில் மோதி​யது.

இதில், ரயி​லின் ஏரோடைனமிக் (முன்) பகுதி சேதமடைந்​தது. மாடும் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தது. இதனால், சுமார் 15 நிமிடங்​கள் ரயில் சேவை பாதிக்​கப்​பட்​டது. 

இதையடுத்​து, பயணி​களின் பாது​காப்​புக்கு ஆபத்தை விளை​வித்​ததற்​காக ரயில்வே சட்​டம் 1989 பிரிவு 154-ன் கீழ் ரயில்வே பாது​காப்​புப் படை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, மாட்​டின் உரிமை​யாள​ரான மணலூரைச் சேர்ந்த சிவக்​கு​மார் என்​பவரை கைது செய்​தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset