நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மலேசியாவில் பிறந்த இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரியுடனான சந்திப்பு மிகவும் சுவாரஸ்யமானது: டிரம்ப்

வாஷிங்டன்:

மலேசியாவில் பிறந்த இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரியுடனான சந்திப்பு மிகவும் சுவாரஸ்யமானது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதனை கூறினர்.

அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல்லின் தலைவரை ராஜினாமா செய்ய டிரம்ப்  அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில்  சில நாட்களுக்குப் பிறகு அவருடனான தனது சந்திப்பை மிகவும் சுவாரஸ்யமானது என்று டிரம்ப் விவரித்தார்.

இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரி லிப் பூடானை சந்தித்தேன். அவருடன் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஆகியோரும் வந்திருந்தனர்.

அவருடனான சந்திப்பு மிகவும் சுவாரஸ்யமானது.

அவரது வெற்றி, வாழ்க்கை பயணம் ஒரு அற்புதமான கதை அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் டானுடன் நேரத்தைச் செலவிட்டு அடுத்த வாரம் அவருக்கு பரிந்துரைகளை கொண்டு வருவார்கள் என்று டிரம்ப் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset