
செய்திகள் தமிழ் தொடர்புகள்
போக்கிடமற்றவர்களின் புகலிடமா திமுக கூட்டணி?
அரசியல் அனாதைகளுக்கு திமுக என்ன சரணாலயமா?
வாக்கு வங்கியே இல்லாத உதிரிகட்சிகள், தாங்கள் ஏதோ தமிழக அரசியலையே புரட்டி போட்டுவிடக் கூடிய சக்தி போல ஒரு தோற்றம் காட்டி, திமுகவிலும் ஒரு துண்டை போட்டு வைப்போமே என்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வருகிறார்கள்.
திமுக கூட்டணியை பொறுத்த வரை அது வலுவாக உள்ளது. இன்னும் ஏதாவது புதிய கட்சி வந்து தான் அது புதிதாக பலம் பெற வேண்டும் என்ற கட்டாயம் திமுக கூட்டணிக்கு இல்லை.
கடந்த ஐந்தாண்டுகளாக திமுக அரசை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் இந்த கட்சிகள் பல திருப்திகளை விழுங்கிக் கொண்டு, மதச்சார்பற்ற கொள்கைக்காக தங்கள் விசுவாசத்தை காட்டி வருகின்றன.
இந்தக் கட்சிகள் ஐந்தாண்டுகளாக திமுக ஆட்சிக்கு ஆதரவாக உறுதியோடு நின்றுள்ளதை அலட்சியப்படுத்தி, தொகுதிகளைக் குறைத்தால் அவர்களுக்கு மன உளைச்சல் உருவாகும்.
இப்படியான சூழலில், ‘கூடுதல் லக்கேஜாக’
கமலஹாசனின் மக்கள் நீதி மையம் வேறு வந்து சேர்ந்திருக்கிறது.
இந்த இக்கட்டான சூழலில் பாஜகவே ‘வேஸ்ட் லக்கேஜ்’ என கழற்றிவிட்டுள்ள ஒ.பிஎஸ் வந்து துண்டை போட்டு போயுள்ளார். ஒபிஎஸின் அரசியல் வாழ்க்கை என்பது ஆரம்ப காலம் தொடங்கி திமுக எதிர்ப்பு தான். மேலும் பாஜகவின் கொத்தடிமையாக அவர் செயல்பட்ட காலங்கள் அனைத்தும் மக்கள் கண் முன் நிற்கிறது.
ஒபிஎஸுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், அவரது ஆதரவு ஓட்டுகள் அந்த தொகுதியில் நிற்கும் பாஜக அல்லது அதிமுகவுக்கு தான் போகும். ஆகவே, ஒபிஎஸ் திமுக கூட்டணிக்கு வருவது கூட பாஜகவின் சூழ்ச்சியாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
2021 தேர்தலில் அரை சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்ற தேமுதிமுகவிற்கோ ஆசை கடலளவுக்கு உள்ளது. இந்தக் கட்சியும் தற்போது வரை பாஜகவை தீவிரமாக ஆதரித்தது. கடுகளவும் கொள்கை இல்லாத இந்தக் கட்சியை யாரும் கூட்டணியில் சேர்க்கவிட்டால் இந்த தேர்தலோடு அஸ்தமனமாகிவிடும்.
மற்றொரு பக்கம் பலவீனப்பட்டுள்ள பாமக இரண்டாகப் பிளந்து கிடக்கிறது. கடந்த பல்லாண்டுகளாக பாஜகவிற்கு பல்லாக்கு தூக்கிவிட்டு, பாதி கட்சியை மகனிடம் இழந்துவிட்டு, மீதி வைத்துள்ள ராமதாஸ், தற்போது திமுக பக்கம் சாயலாம் என நினைக்கிறார். ராமதாஸ் வந்தால் திருமாவளவனை இழக்க நேரிடும். (விரிவான கட்டுரைக்கு அறம் ஆன்லைன் பார்க்க)
தற்போதைய கூட்டணியை கட்டுக் கோப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்றால், போக்கிடமில்லாத இந்த ’வேஸ்ட் லக்கேஜ்களை’ திமுக தூக்கி சுமக்கக் கூடாது. அப்படி சேர்த்தால், தற்போதுள்ள கட்டுகோப்பு குலைந்து கலகலத்துவிடும். தொகுதி பங்கீட்டில் அதிக கசப்புணர்வை சந்திக்க நேரும்.
தற்போதுள்ள கொள்கை கூட்டணி என்ற பெயர் சிதைந்து விடும்.
- சாவித்திரி கண்ணன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2025, 11:06 am
தமிழகத்தில் செப். 4-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
August 30, 2025, 12:49 am
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி நொறுங்கி விழுந்தது
August 27, 2025, 5:56 pm
பண்டிகைக்காக 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: சென்னையை அலங்கரித்த விதவிதமான விநாயகர்
August 27, 2025, 4:26 pm
தவெக தலைவர் விஜய் மீதும் அவரது பவுன்சர்கள் மீதும் 10 பேர் மீதும் வழக்குப் பதிவு
August 26, 2025, 2:08 pm
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூக்களின் விலை 3 மடங்காக உயர்வு
August 25, 2025, 1:27 pm
‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
August 24, 2025, 9:58 pm
இபிஎஸ் கீழ்ப்பாக்கம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது: பெங்களூரு புகழேந்தி
August 24, 2025, 6:47 pm