செய்திகள் தமிழ் தொடர்புகள்
கவினும் நானும் உண்மையா காதலித்தோம்: காதலி சுபாஷினி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
நெல்லை:
கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை பற்றி அவரின் காதலி சுபாஷினி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல்வகணேஷ், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சோ்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், அந்தப் பெண்ணின் தம்பி சுா்ஜித் கவினை வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில் சுபாஷினி ஒரு பரபரப்பு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில்,
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். ஆனால் நாங்கள் செட்டில் ஆக எங்களுக்கு நேரம் தேவைப்பட்டது.
கடந்த மே 30 ஆம் தேதி கவினும் சுர்ஜித்தும் சந்தித்து பேசிக் கொண்டார்கள்.
எங்கள் காதலைப் பற்றி சுர்ஜித், அப்பாவிடம் சொல்லிவிட்டான். நீ காதலிக்கிறாயா? என்று அப்பா, என்னிடம் கேட்க நான் காதலிக்கவில்லை என்று கூறிவிட்டேன்.
ஏனென்றால் கவின் என்னிடம் நேரம் கேட்டிருந்தான். 6 மாதம் கழித்து வீட்டில் கூற கவின் சொல்லியிருந்தான். ஆனால் அடுத்த 2 மாதங்களில் இப்படி ஆகிவிட்டது.
கவின், சுர்ஜித்துக்கு இடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை.
பெண் பார்க்க வரச் சொல்லி கவினிடம் சுர்ஜித் கூறியிருப்பது மட்டும் எனக்கு தெரியும்.
அன்று என்ன நடந்தது என்றால், கவினின் தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்க கவின், அவனுடைய அம்மா, மாமா வந்திருந்தார்கள்.
நான் சிகிச்சை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது கவினின் அம்மா, மாமாவிடம் பேசிவிட்டு கவின் வெளியே சென்றுவிட்டான். அதன்பிறகே கவினைத் தேடினோம்.
தொலைபேசியில் அழைத்த போது அவன் எடுக்கவில்லை. அதன் பிறகு தான் இப்படி நடந்துவிட்டது.
ஆக தேவையில்லாமல் யாரும் இஷ்டத்திற்கு வதந்தியை கிளப்ப வேண்டாம். உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள்.
என் அப்பா, அம்மாவுக்கு இதில் எந்த சம்மந்தமும் கிடையாது. இதை இத்துடன் விட்டுவிடுங்கள். விட்ருங்க அவ்வளவு தான் என்று அவர் பேசியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 2:17 pm
அரசுப் பேருந்தில் பெரம்பூருக்கு பயணித்த முதல்வர் விஜய்
June 24, 2026, 11:18 am
வேளாண் அமைச்சரின் சொந்தத் தொகுதியில் ஆயிரக்கணக்கான நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசம்
June 23, 2026, 10:20 pm
நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஜூன் 28-இல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 23, 2026, 1:23 pm
1990 முதல் மக்கள் பணி செய்து வருகிறேன்: சட்டசபையில் விஜய் பேச்சு
June 22, 2026, 11:09 am
முதல் அமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
June 18, 2026, 4:15 pm
தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
June 18, 2026, 10:39 am
இன்று தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்து சர்ச்சை தொடருமா?
June 17, 2026, 12:37 pm
