செய்திகள் தமிழ் தொடர்புகள்
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்
சென்னை:
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பை சுட்டிக்காட்டி, ‘ரூ.258 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ, தவெக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலாமாகியுள்ளது’ என திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி ஆதவ் அர்ஜுனா தரப்பில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், திமுக ஐ.டி. பிரிவுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக எனது உறவினர் ஜான் பிரிட்டோ ஊடகங்களில் விளக்கம் அளித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும். தவறினால் குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
