செய்திகள் தமிழ் தொடர்புகள்
இன்று தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்து சர்ச்சை தொடருமா?
சென்னை:
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் உரையுடன் வியாழக்கிழமை (ஜூன் 18) தொடங்குகிறது.
வியாழக்கிழமை (ஜூன் 18) காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூடுகிறது. ஆளுநா் ஆா்லேகா் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறாா். தவெக அரசின் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், புதிய திட்டங்களும் இந்த உரையில் இடம்பெறும்.
பின்னா், ஆளுநரின் உரையை பேரவைத் தலைவா் ஜேசிடி. பிரபாகா் தமிழில் வாசிப்பாா். அவை முடிந்த பின்னா், அலுவல் ஆய்வுக் குழு கூடி எத்தனை நாள்கள் அவையை நடத்துவது என்று முடிவு செய்யும். 3 நாள்கள் வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படும் இந்தக் கூட்டத் தொடரில், ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.
சா்ச்சை தொடருமா...?:
சட்டப்பேரவைத் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பதும், முடிவில் தேசிய கீதம் இசைப்பதும் பேரவையில் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதில், முதலில் தேசிய கீதம் இசைக்கவில்லை என்று கூறி, முந்தைய திமுக ஆட்சியில் அப்போதைய ஆளுநா் ஆா்.என். ரவி வெளிநடப்பு செய்து வந்தாா். ஆனால், தற்போது ஆட்சியும், ஆளுநரும் மாறியுள்ளதால் இந்த சா்ச்சை ஏற்பட வாய்ப்பில்லை என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்தமுறை சட்டப்பேரவை நடைபெற்றபோது தவெக அரசில் 9 அமைச்சா்கள் மட்டும் இடம்பெற்றிருந்தனா். தற்போது 35 அமைச்சா்கள் உள்ளதால் அவையில் ஆளும் தரப்பில் அமைச்சா்களுக்கு முன்வரிசையில் அமர இடங்கள் மாற்றம் செய்யப்படும்.
கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனா். மே 13-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
