செய்திகள் தமிழ் தொடர்புகள்
வேளாண் அமைச்சரின் சொந்தத் தொகுதியில் ஆயிரக்கணக்கான நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசம்
கும்பகோணம்:
கும்பகோணத்துக்கு அருகே சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. வேளாண் அமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே இந்த அவலம் நிகழ்ந்திருப்பதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.
கும்பகோணத்துக்கு அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில், தனியாருக்குச் சொந்தமான இடத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் 30,000 மெட்ரிக் டன் நெல் சேமிக்கக்கூடிய திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி இரவு பெய்த மழையில், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து வீணாகிவிடவே, அதிகாரிகளையும் ஆட்சியாளர்களையும் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் நம்மிடம், ‘`பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில், கடந்த சம்பா பருவத்தில் அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்ட 25,000 மெட்ரிக் டன் அளவுகொண்ட நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளும், அலுவலர்களும் முறையாக தார்ப்பாய் போட்டு மூடி நெல்லைப் பாதுகாக்கவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் பெய்த மழையில் சேமிப்புக் கிடங்கைச் சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கியது. முறையாக மூடப்படாததால், நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகின. சாக்குகள் கிழிந்து நெல் மணிகள் தண்ணீரில் கொட்டின.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
